சென்னையில் போக்குவரத்து நெரிசலில் காரை நிறுத்தியபோது, ஹார்ன் அடித்து தொல்லை கொடுத்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் பூவேந்திரகுமார் தாக்கப்பட்டார். இதுகுறித்து விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், வியாசர்பாடியை சேர்ந்த இம்ரான், கொடூங்கையூரைச் சேர்ந்த அன்சாரி, முனவர் பாஷா ஆகிய மூவரை கைது செய்தனர். காயமடைந்த வழக்கறிஞர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.