புளியந்தோப்பு: பால்கனி இடிந்து ஒருவர் காயம்; வாகனங்கள் சேதம்

303பார்த்தது
புளியந்தோப்பு: பால்கனி இடிந்து ஒருவர் காயம்; வாகனங்கள் சேதம்
புளியந்தோப்பு, பட்டாளம் பராக்கா தெருவில் வசிக்கும் வாசுதேவன் (58) என்பவர், சம்பவதினத்தன்று இரவு தனது வீட்டின் முதல் தள பால்கனியில் அமர்ந்திருந்தபோது, திடீரென பால்கனி உடைந்து விழுந்தது. இதில் வாசுதேவனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பால்கனி இடிந்து விழுந்ததில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆறு இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி