நெரிசலில் சிக்கி தவிக்கும் வடபழனி

197பார்த்தது
நெரிசலில் சிக்கி தவிக்கும் வடபழனி
சென்னை மாநகரின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றான வடபழனி ஆண்டவர் கோவில் அமைந்துள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சாலையின் நுழைவு வளைவில் இருந்து கோவிலின் முதன்மை கோபுரம் வரை, சாலையின் இருபுறமும் கடைகள் அத்துமீறி நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் விதிகளை மீறி அதிக அளவில் நிறுத்தப்படுவதால், இப்பகுதியில் எப்போதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி