சென்னையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

74பார்த்தது
சென்னையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
சென்னையில் மாதவரம், செங்குன்றம் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் நாளை (21ம் தேதி) காலை 10 மணி வரை 12 மணி நேரம் திருவொற்றியூர் மற்றும் மாதவரம் பூஸ்டர் குடிநீர் பகிர்மான நிலையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இதனால், திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்துக்கொள்ளவும், அவசர தேவைகளுக்கு இணையதளம் மூலம் லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளவும் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. குடிநீர் இணைப்பு இல்லாத மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு வழக்கம்போல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி