சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

309பார்த்தது
சென்னை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
சென்னை பெசன்ட் நகரில், கூலித்தொழிலாளி பிரசாந்த் (34) என்பவர், அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 10ஆம் தேதி இரவு, குடிபோதையில் வீட்டிற்கு வெளியே நின்று ஆபாச வார்த்தைகளால் பேசி, பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் பிரசாந்தை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஏற்கனவே 9 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.