சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த அருண்குமார்(34) என்ற பைக் டாக்ஸி ஓட்டுநரின் இரண்டு செல்போன்கள், கடந்த 23ம் தேதி நள்ளிரவு வடபழனி பேருந்து நிலையம் அருகே மர்ம நபரால் திருடப்பட்டன. இது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிகில்(22) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து செல்போன்களை மீட்டனர்.