
சென்னை: திருமணம் ஆனதை மறைத்து காதல் வலை; இளைஞர் கைது
சென்னையில், ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளதை மறைத்து, இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண்ணை காதலித்து, ஒரு வருடமாக உல்லாசமாக இருந்து வந்த மென்பொருள் பொறியாளர் பாலாஜி தங்கராஜ் கைது செய்யப்பட்டார். பாலாஜியின் போனில் பல பெண்களுடன் பேசியதை கண்டறிந்த அந்த பெண், மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்தார். அவரை மீட்ட பெற்றோர், பாலாஜியை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





























