எழும்பூர் ரயில் நிலையத்தில் 630பேர் மீட்பு

எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 28ம் தேதி மாலை 5 மணி அளவில் காணாமல் போன 5 வயது சிறுமியை, ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் ஸ்வாதி துரிதமாக மீட்டு ஒப்படைத்தார். 2025-26 ஆம் ஆண்டில் மட்டும், வீட்டை விட்டு ஓடிவந்த, ரயில் நிலையங்களில் காணாமல் போன 117 சிறுமியர் உட்பட மொத்தம் 630 பேர் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
