சென்னை நகரின் முக்கிய பகுதியான அண்ணா சாலையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை 3.2 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட மேம்பாலப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை சுமார் 68 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.