எழும்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

0பார்த்தது
எழும்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், மேற்கு வங்கத்திலிருந்து வந்த சிறப்பு ரயிலில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பினாய் சேத்ரி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் கரக்பூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்தது. அவரும், கஞ்சாவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி