எழும்பூரில் ரயில் சேவையில் மாற்றம்: கூடுதல் பேருந்து இயக்கம்

107பார்த்தது
எழும்பூரில் ரயில் சேவையில் மாற்றம்: கூடுதல் பேருந்து இயக்கம்
எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக, பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை 45 நாட்களுக்கு சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் அறிவிப்பைத் தொடர்ந்து, மா.போ. கழகம் இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் வரை பேருந்துகளை இயக்கி வருகிறது. வழக்கமான சேவைகளுடன் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி