பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்- 06115) நாளை மறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 15-ந்தேதி மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.