சென்னை: நடுரோட்டில் உடைந்த லாரியின் சேஸ் - ஸ்தம்பித்த எண்ணூர் விரைவு சாலை

346பார்த்தது
சென்னை: நடுரோட்டில் உடைந்த லாரியின் சேஸ் - ஸ்தம்பித்த எண்ணூர் விரைவு சாலை
சென்னை துறைமுகத்திலிருந்து தனியார் தொழிற்சாலைக்கு இயந்திரங்களை ஏற்றிச் சென்ற ட்ரைலர் லாரி, எண்ணூர் விரைவுச் சாலையில் அதிக பாரம் காரணமாக சேஸ் உடைந்ததால் கவிழும் நிலைக்கு வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து, 10,000 ரூபாய் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி