மருதமலையில் அன்னதானம் தொடங்கி வைத்த முதல்வர்

63பார்த்தது
மருதமலையில் அன்னதானம் தொடங்கி வைத்த முதல்வர்
அழகர்​கோ​யில், மருதமலை கோயில்​களில் நாள் முழு​வதும் அன்ன​தானம் வழங்​கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 26) தொடங்கி வைத்தார். 

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில், கோயில்​களில் நாள் முழுவதும் அன்ன​தானம் வழங்​கும் திட்​ட​மானது ஸ்ரீரங்​கம் - ரங்கநாத சுவாமி கோயில், பழனி - தண்டா​யுத​பாணி சுவாமி கோயில் ஆகிய 2 கோயில்​களில் செயல்​படுத்​தப்​பட்டு வந்தது. இந்நிலை​யில், இந்த அரசு பொறுப்​பேற்​றபின், கடந்த 2021-ம் ஆண்டு திருச்​செந்​தூர் - சுப்​பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் - மாரியம்மன் கோயில், திருத்தணி - சுப்​பிரமணிய சுவாமி கோயில்​களி​லும், 2022-ம் ஆண்டு ராமேசு​வரம் - ராமநாதசுவாமி கோயில், திரு​வண்ணாமலை - அருணாச்சலேசுவரர் கோயில், மதுரை - மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில்​களில் நாள் முழு​வதும் அன்ன​தான திட்டம் முதல்​வ​ரால் தொடங்கி வைக்​கப்​பட்டது. 

இந்நிலை​யில், இத்திட்​டத்தை மேலும் விரிவுபடுத்​தும் விதமாக  அழகர்கோயில் கள்ளழகர், மருதமலை சுப்​பிரமணி​யசுவாமி ஆகிய 2 கோயில்​களில் இத்திட்டத்தை காணொலி வாயிலாக முதல்வர் மு. க. ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். மேலும், பழனி - தண்டா​யுத​பாணி சுவாமி கோயில் சார்பாக நடத்​தப்​படும் ஒரு பள்ளி மற்றும் 4 கல்லூரி​களில் மதிய உணவு வழங்​கும் திட்டத்தை​யும் முதல்வர் நேற்று தொடங்கி வைத்​தார்.

தொடர்புடைய செய்தி