சென்னை சௌகார்பேட்டையில் உள்ள ஒரு பார்சல் நிறுவனத்தின் கிடங்கில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக யானைக்கவுனி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையிட்டபோது, பல லட்சம் மதிப்புள்ள 33,010 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஜெயந்தர்சிங் மற்றும் சஞ்சய்சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.