வெளிநாட்டு வேலை மோசடி: நான்கு பேர் கைது

0பார்த்தது
வெளிநாட்டு வேலை மோசடி: நான்கு பேர் கைது
கடந்த சில ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டில் கைநிறைய சம்பளத்தோடு வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமான தமிழக இளைஞர்களை, குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களை சுற்றுலா விசா மூலம் ஏமாற்றி மியான்மர் நாட்டில் உள்ள கே. கே. பார்க் என்ற பகுதியில் தவிக்கவிட்ட மோசடி கும்பல் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட ராஜ்குமார், மணவாளன், தீபக், அபிஷேக்ராஜன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக மியான்மர் நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட 465 இந்தியர்கள் கடந்த 6 மற்றும் 10-ந்தேதிகளில் மீட்கப்பட்டு இரண்டு கட்டங்களாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 35 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் ஆவார்கள். இதில் 18 பேர்களை தாய்லாந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி