தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன் - சசிகலா

77பார்த்தது
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்பேன் - சசிகலா
திமுக அரசிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும், அமைப்பேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா தேவாலயத்தில் சசிகலா இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கருணை இல்லத்தில் முதியவர்கள் உடன் இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதியோருக்கு உணவும் பரிமாறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது இல்லை. திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழக கேரள எல்லையில் பாதுகாப்பு முறையாக மேற்கொள்ளவில்லை அதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. விவகாரம் நீதிமன்றம் வர சென்றதால் நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

திமுகவின் கணக்கெல்லாம் தமிழக மக்களிடம் செல்லாது. அதிமுகவின் வாக்கு வங்கி குறையவில்லை. திமுக அரசிடமிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான் எனது ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமையும், அமைப்பேன் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி