பராமரிப்பு பணிகள்: மின்சார ரயில்கள் ரத்து

21பார்த்தது
பராமரிப்பு பணிகள்: மின்சார ரயில்கள் ரத்து
சென்னை: எழும்பூர் ரயில் பணிமனையில் நடைபெறவுள்ள மேம்பாட்டுப் பணிகளுக்காக, கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படும் 12 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 12ம் தேதி கடற்கரை – தாம்பரம் இடையே காலை 4:15, இரவு 11:00, 11:20, 11:40, 11:59 மணி ரயில்களும், தாம்பரம் – கடற்கரை இடையே இரவு 10:20, 11:00, 11:40 மணி ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், கடற்கரை – தாம்பரம் இடையே அதிகாலை 5:50 மணி ரயில் நாளை, 10, 11, 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி