சென்னை எழும்பூர் - வேலூர் கண்டோன்மெண்ட் இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை (பிப். 15) மதியம் 12 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மாலை 6 மணிக்கு வேலூர் செல்லும். மறுநாள் (பிப். 16) அதிகாலை 3 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில், காலை 9.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மேலும், பிப். 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.