சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட விக்டோரியா மகால், ரூ. 32.62 கோடி செலவில் அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சீன செராமிக் கற்களால் 1883-ல் அமைக்கப்பட்ட இந்த அரங்கம், இனி பொதுமக்கள் எளிதாகப் பார்வையிட தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், காத்திருப்பு அறையும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது.