மகாசிவராத்திரியை முன்னிட்டு, இன்று (15-02-2024) எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. மேலும், வரும் 16-02-2024 அன்று கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மகாசிவராத்திரி மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.