எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக 40 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணைப்படி ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படாததால் பயணிகள் காலை முதலே கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்துப்பட்டில் நடைமேடைக்கு வெளியே ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நீண்ட நேரம் வரிசையாக நிற்பதால், பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தில் இறங்கி செல்லும் நிலை ஏற்படுகிறது.