ரயில் ரத்து எதிரொலி: கூடுதல் பேருந்து இயக்கம்

2பார்த்தது
ரயில் ரத்து எதிரொலி: கூடுதல் பேருந்து இயக்கம்
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளால் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக, ஏப்ரல் 5 ஆம் தேதி வரை கூடுதலாக 60 பேருந்துகளை இயக்க மாநகர பேருந்து கழகம் முடிவு செய்துள்ளது. ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையம் - கிளாம்பாக்கம் இடையே 27 பேருந்துகள், பல்லாவரம் - செங்கல்பட்டு இடையே 15 பேருந்துகள், எழும்பூர் - தலைமைச் செயலகம் இடையே 8 பேருந்துகள், நுங்கம்பாக்கம் வழியாக 5 பேருந்துகள், மற்றும் சின்னமலை ரயில் நிலையம் வழியாக 5 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.