சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்களுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் இந்த அட்டவணையின்படி, வார நாட்களில் 106 ரயில்களும், வார இறுதியில்
96 ரயில்களும் இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் அதிகாலை 3:50 மணிக்கு புறப்படும்.