விக்டோரியா அரங்கம் 20ஆம் தேதி திறப்பு

3பார்த்தது
விக்டோரியா அரங்கம் 20ஆம் தேதி திறப்பு
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான விக்டோரியா பொது அரங்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வரும் 20ஆம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார். சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 32 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில், 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் நவீன கண்ணாடி லிப்ட், மழைநீர் வடிகால்கள், குளிரூட்டப்பட்ட அரங்கம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.