செனாய் நகரில் வாகனங்கள் சுத்தம் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த கவரேஷ் (19), நேற்று வாகனங்களைச் சுத்தம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற சக ஊழியர் ரஞ்சித்குமாரையும் மின்சாரம் தாக்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை போலீசார், கவரேஷின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.