
பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம்
சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடைக்கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம், நேற்று செம்மஞ்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் துவங்கியது. இந்த இலவச பயிற்சி முகாமில், வாலிபால், கால்பந்து, பால்பேட்மின்டன் ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.













