சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

69பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு பாங்காக்கில் இருந்து வந்த சுற்றுலா பயணியிடம் இருந்து சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபர், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்றுவிட்டு திரும்பியபோது, சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவரது சூட்கேஸில் 8 பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகளுக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you