சென்னை: முதல்வர் கான்வாய் உள்ளே புகுந்த நபர்.. பரபரப்பு

458பார்த்தது
சென்னை: முதல்வர் கான்வாய் உள்ளே புகுந்த நபர்.. பரபரப்பு
தமிழக முதல்வர் விஜய் இன்று தலைமை செயலகத்தில் பணிகளை முடித்துக்கொண்டு நீலாங்கரை இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்தநிலையில், முதல்வருக்கு பலத்த பாதுகாப்பு உள்ள நிலையில் அதனை மீறி, கான்வாய் குறுக்கே இளைஞர் ஒருவர் ஓடிவந்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. அவர் ரசிகரா அல்லது தொண்டரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி