சென்னை யானைக்கவுனியில் உள்ள நகைப்பட்டறையில், உரிமையாளரை தாக்கி மயக்க ஸ்பிரே அடித்து, சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெகதீஷ் நடத்தி வரும் நகைப்பட்டறைக்கு வந்த இருவர், நகை வாங்குவது போல நடித்து திடீரென ஜெகதீஷை தாக்கி, கடையில் இருந்த 800 கிராம் நகையை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கி டிவிஆரையும் எடுத்துச் சென்றனர்.