2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். அதில் சில முக்கிய அம்சங்கள் இதோ
* நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய திட்டம் ரூ. 75 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு! * ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ. 250 கோடியில் செயல்படுத்தப்படும்.
* ரூ. 150 கோடியில் புராதனக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்
* திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 14.2 கி.மீ நீளம்
* ரூ. 2,100 கோடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைக்கப்படும்.
* ரூ. 50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். * பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும்.
* ரூ. 125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளப்படும்.
* சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். 30 இடங்களில் ஒரு மையத்துக்கு தலா ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.