மெரினா கடற்கரையில் இறங்கி போராட்டம்

2பார்த்தது
மெரினா கடற்கரையில் இறங்கி போராட்டம்
சென்னையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் செய்யும் முடிவை கைவிடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று திடீரென மெரினா கடற்கரையில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை கடலில் இருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.