வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வர, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனிடையே, துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 217 பேர் சென்னை வந்தடைந்தனர். எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஒரு சில விமானங்களை இயக்கி வரும் நிலையில், பெண்கள், குழந்தைகள் உட்பட 217 பேர் இன்று அதிகாலை சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீருடன் வரவேற்றனர்.