
சென்னையில் 234 குற்றவாளிகள் கைது
தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், ரவுடிகளை ஒடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சென்னையில் நேற்று நடைபெற்ற சிறப்பு வேட்டையில், பல்வேறு காவல் நிலையங்களில் பழைய குற்றவாளிகளாக பதிவு செய்யப்பட்ட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், போதைப் பொருட்கள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 101 பேர் சிக்கினர். இவர்களிடமிருந்து 21.4 கிலோ கஞ்சா மற்றும் 1,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.















