எழும்பூர் ரயில் நிலையத்தில்புதன்கிழமை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 61.50 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ. 2.5 லட்சம் ரொக்கப் பணத்துடன் சேலத்தைச் சேர்ந்த சஞ்சய் அருண்குமார் (40) என்பவர் கைது செய்யப்பட்டார். ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வெள்ளி மற்றும் பணத்தை கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வெள்ளி மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சஞ்சய் அருண்குமார் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.