சென்னை ராஜமங்கலம் பகுதியில் வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் 4 பேரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.