சென்னையில் நேற்று 46. 21டன் பழைய பொருட்கள் அகற்றம்

0பார்த்தது
சென்னையில் நேற்று 46. 21டன் பழைய பொருட்கள் அகற்றம்
பெருநகர சென்னை மாநகராட்சி, கடந்த 11.10.2025 அன்று முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள், உடைகள் போன்ற திடக்கழிவுகளைப் பெற்று அகற்றும் புதிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதுவரை 18 சனிக்கிழமைகளில் 2,165 நபர்களிடமிருந்து 858.40 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நேற்று (14.02.2026) மட்டும் 103 நபர்களிடமிருந்து 46.21 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்தில் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி