சென்னையில் 133 ரவுடிகள், 101 போதைப்பொருள் விற்பனையாளர் கைது

410பார்த்தது
சென்னையில் 133 ரவுடிகள், 101 போதைப்பொருள் விற்பனையாளர் கைது
சென்னையில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் சிறப்பு தணிக்கை நடவடிக்கையில் 133 ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 101 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 21.4 கிலோ கஞ்சா, 1,070 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புளியந்தோப்பு - 20 பேர், அடையாறில் 16 பேர், தி.நகரில் 18, அண்ணா நகரில் 10, மயிலாப்பூரில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி