சென்னை: ரூ.57 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை

65பார்த்தது
சென்னை: ரூ.57 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. 

இந்த சூழலில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 57,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 27) சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ரூ. 7,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 100-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி