சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ரவுடி 'கருக்கா' வினோத் (42) சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.