காவல் ஆய்வாளரை பாராட்டிய கமிஷனர் அருண்

132பார்த்தது
காவல் ஆய்வாளரை பாராட்டிய கமிஷனர் அருண்
சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தின் 2022 ஆம் ஆண்டு போதைப்பவுடர் வைத்திருந்த NDPS வழக்கில், சிறப்பான புலனாய்வு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் பெற்றுத் தந்த கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணனை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்தச் செயல்பாடு காவல் துறையின் அர்ப்பணிப்பையும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதில் அதன் உறுதியையும் காட்டுகிறது.

டேக்ஸ் :