சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விஷ்ணு ஹரி, இன்ஸ்டாகிராமில் காதலித்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததும், அவர்கள் அந்தப் பெண்ணை ஒடிசாவுக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக மாணவர் விஷ்ணு ஹரி போலீசில் புகார் அளித்துள்ளார். இது இன்ஸ்டாகிராம் காதல் கதையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.