வி. வானமாமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: நான் பட்டியலினவகுப்பைச் சேர்ந்தவன். நாங்குனேரியை பூர்வீகமாகக் கொண்ட நான் சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகிறேன். இந்தக் குடியிருப்பில் உள்ள சில உரிமையாளர்கள் என்னிடம் சாதியரீதியிலான தீண்டாமைவன்கொடுமையில் ஈடுபட்டனர். என்னை எந்தநிகழ்வுகளுக்கும் அழைப்பதுமில்லை, பங்கேற்கவிடுவதுமில்லை.
இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் கடந்த 2024 டிசம்பர் 9-ம் தேதியன்று தேசியபட்டியலினஆணையத்துக்குப் புகார் அளித்தேன். ஆனால் போலீசாரும், தேசியபட்டியலினஆணையமும் அதன்பிறகும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. தீண்டாமைவன்கொடுமை அந்தக் குடியிருப்பில் தற்போதுதீவிரமடைந்துவிட்டது. எனவே எனதுபுகார்மனுவைப் பரிசீலிக்க தேசியபட்டியலினஆணையம் மற்றும் மாநகரகாவல் ஆணையருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்தமனுமீதான விசாரணை நீதிபதிபி.வேல்முருகன் முன்பாக நடந்தது.
அப்போது மனுதாரர்தரப்பில் வழக்கறிஞர்ஜி.சரவணக்குமாரும், அரசுதரப்பில் குற்றவியல்வழக்கறிஞர்சி.இ.பிரதாப்பும் ஆஜராகிவாதிட்டனர். அதையடுத்து நீதிபதி இந்தவழக்கில் சென்னைமாநகரகாவல்ஆணையரானஅருண் நாளை (ஜூன் 9) ஆஜராகிவிளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.