கிளாம்பாக்கம்: மாநகர பேருந்து மோதி பயணி கால் முறிவு

336பார்த்தது
பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர் ஊருக்கு செல்வதற்காக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மாநகர பேருந்து ஒன்று இவர் பேருந்துக்கு முன்னாள் நடந்து செல்வதை கவனிக்காமல் அவர் மீது மோதியது. இதில் முன்பக்க டயரில் சிக்கிய ஜெய்சங்கருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மாநகர பேருந்தை ஓட்டி வந்த கிஷோர் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி