சூர்ய காந்தி பூ விதை நடும் பணியை தொடங்கி வைத்த மேயர்

0பார்த்தது
சூர்ய காந்தி பூ விதை நடும் பணியை தொடங்கி வைத்த மேயர்
பெருநகர சென்னை மாநகராட்சியில், சுற்றுப்புற சூழலை மேம்படுத்திடும் வகையிலும், அழகுபடுத்திடும் வகையிலும், தன்னார்வலர்கள் மூலமாக சூரிய காந்தி விதைகள் நடும் பணி இன்று தொடங்கப்பட்டது. துவக்கமாக, மேயர் பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள பூங்காவில் சூரியகாந்தி விதை நட்டு இந்தப் பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாநகரப் பூங்காக்கள், பொது இடங்கள் மற்றும் சாலையின் மைய தடுப்பு சுவர்கள் அழகுபடுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி