சென்னையை நோக்கி வந்த ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில், பீகாரைச் சேர்ந்த மானவ் பஸ்வான் (48) படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். திருவொற்றியூர்-வ. உ. சி. நகர் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. தலையில் பலத்த காயமடைந்த அவரை, சக பயணிகள் உதவியுடன் ரயில்வே போலீசார் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.