சென்னை மண்ணடியை சேர்ந்த அமீது (35) என்பவர் நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கத்தில் உள்ள நண்பரிடம் இருந்து ரூ. 2 லட்சத்தை கடனாக வாங்கி கொண்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்த 2 பேர் வழிமறித்து தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர். பொதுமக்கள் ஒருவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் கார்த்திக் (25) என்பதும், தப்பிச் சென்றவர் ஜீவா (27) என்பதும் தெரியவந்தது.