சென்னையில் கட்டுமான திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களுக்கு, பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் உதவி செயற்பொறியாளர் கள ஆய்வு செய்ய வேண்டும். கள ஆய்வு முடிந்த இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆவணங்களை ஆய்வு செய்ய அடுத்த ஐந்து நாட்கள் அவகாசம் வழங்கப்படும். இதன் மூலம், விண்ணப்பம் பெறப்பட்ட 27 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.