தலைமை செயலக வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்

0பார்த்தது
தலைமை செயலக வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழிலரசன், தலைமை செயலக நுழைவாயில் அருகே தீக்குளிக்க முயன்றார். வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி தருவதாக கூறி ₹7 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகவும், விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மனு கொடுக்க வந்தபோது காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்ததால் வேதனையில் தீக்குளிக்க முயன்றதாக எழிலரசன் தெரிவித்தார். பாதுகாப்பு காவலர்கள் அவரை தடுத்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி