கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றியமைக்கப்படும் என்றும், இது குறித்து முதல்வருடன் ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.